171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தருவதை தடுக்க பார்கின்றார்கள் என சிலர் குற்றம் சாட்டுகின்றார்கள். எமக்கு தேவையற்றவையை அவர்களிடம் வாங்கி என்ன செய்வது ? என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு மக்கள் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
அரசாங்கம் தருவதனை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்கு இல்லை. எமக்கு என்ன தேவை என்பதனை நாம் கூறி எமது தேவைக்கு ஏற்றதனையே பெற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கம் தருவதனை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவசியம் இல்லை.
எமக்கு விருப்பமில்லாத தீர்வினை எம் மீது திணிக்க முடியாது. அவர்கள் தருவதனை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது. ஏதோ தந்து விட்டார்கள் என நாம் அதனை வாங்கினால் 20 வருடங்களின் பின்னர் வடக்கு கிழக்கை சேராத வேறு நபர்கள் எம்மை ஆட்சி செய்வார்கள். அவர்களின் கீழ் நாம் வாழ வேண்டும்.
அரசாங்கம் தரும் எதுவும் இல்லாத தீர்வு எமக்கு வேண்டாம் என மக்கள் இயக்கமாக உருவாகி அதனை வெளிபடுத்த வேண்டும். கொழும்பில் வாழும் நபர்கள் நினைக்கும் , விரும்பும் தீர்வினை இங்கே வாழும் மக்கள் ஏற்க வேண்டும் என்றில்லை என தெரிவித்தார்.
Spread the love