171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புகலிடக் கோரிக்கையாளர்களை மீள அழைப்பது குறித்து மியன்மாருக்கும் பங்களாதேஸிற்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. வன்முறைகள் காரணமாக சுமார் 740000 ரோஹினிய முஸ்லிம்கள், பங்காளதேஸில் புகலிடம் அடைந்திருந்தனர்.
இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை மீள நாட்டுக்கு அழைத்துக் கொள்வது தொடர்பில் மியன்மார் அரசாங்கம் ஒர் பொறிமுறைமையை அறிமுகம் செய்ய உள்ளது. வாரத்திற்கு 1500 புகலிடக் கோரிக்கையாளர்கள் என்ற அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களையும் மீள அழைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love