குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊடகங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவில்லை என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டூர்ட்டே ( Rodrigo Duterte ) தெரிவித்துள்ளார். இணைய செய்தி நிறுவனமொன்றின் அனுமதிப்பத்திரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராப்ளர் டொட் கொம் (Rappler.com) என்ற இணைய தளமே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த இணைய தளம் அரசாங்கத்திற்கு எதிரான வகையில் செய்திகளை பிரசூரம் செய்து வந்தது. இந்த நிலையில் தாம் இணைய தளத்தை முடக்கவில்லை எனவும், இது ஓர் போலி செய்தி நிறுவனம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த ஊடக நிறுவனம் மீது ஏற்கனவே ஜனாதிபதி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

(Rappler press conference on SEC registration on January 15, 2018)
மேலும் வெளிநாட்டு உரிமம் தொடர்பான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த ஊடகம் நிறுவனம் இயங்கவில்லை என்ற அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


