483
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பொல்கஹவெல மேம்பாலம் பொதுமக்களின் பாவனைக்காக இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
353 மீற்றர் நீளமான மேம்பாலம், ஸ்பெயின் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டதாகும். இந்த மேம்பாலம் நிர்மாணப்பணிகளுக்கு 200 கோடி ரூபா வரையிலான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம், குறித்த பகுதியில் நிலவும் பாரிய வாகன நெரிசலை, குறைத்துக் கொள்ளமுடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love