Home இந்தியாஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டமையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டமையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

by admin


ஹஜ் பயணத்திற்கான மானியத்தை இந்திய மத்திய அரசு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெருமக்கள் புனித பயணமாக மேற்கொள்ளும் ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கி வந்த ஹஜ் பயணத்திற்கான மானியத்தை சிறுபான்மை மக்களுக்கு தொல்லையும், சிரமமும் ஏற்படுத்துவதற்காக வேண்டும் என்றே பழிவாங்கும் உள்நோக்கத்தோடு நரேந்திரமோடியின் மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பிலும், தமிழக காங்கிரஸ் சிறுபான்மை அணியின் சார்பிலும் நாளை காலை 10.30 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு தொல்லை தருவதையும், புனித ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்யப்பட்டதையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More