யாழ்ப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் 3ம், 4ம் ஆண்டு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளைய தினம் முதல் வழமைபோல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கலை பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கிடையே கடந்த 11 ஆம் திகதி மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கலை பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுக்கான தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர், மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நீக்கப்பட்டது. அதன்படி, நாளை முதல் அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.