தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள்தளபதி கிட்டுவை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ததாத தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய விடயங்களைப் பயன்படுத்தக் கூடாது தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இந்தநிலையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிலர் கிட்டுவின் 25வது நினைவு தினத்தை அனுஷ்டித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இதன் போது பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கிருந்த சிறுவன் ஒருவர், கிட்டுவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாகவும் இது தேர்தல் நடவடிக்கைகளுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய விடயங்களை பயன்படுத்துவதை காட்டிலும் பாரதூரமானது எனவும், முல்லைத்தீவுப் பகுதி பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இங்கு உரையாற்றிய கூட்டமைப்பின் வேட்பாளர், கடந்த 25 வருடங்களுக்கு முன் மரணித்த கிட்டு உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் எதிர்பார்த்த படி, தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களது விடுதலையை வென்றெடுக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் எனவே, வடக்கில் கூட்டமைப்பை அனைவரும் பலப்படுத்த வேண்டும் எனவும உரையாற்றயதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.