204
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.இராமச்சந்திரனின் 101ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு இன்று காலை யாழ் இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன், யாழ்ப்பாணத்திலுள்ள எம்.ஜி.ஆர் இரசிகர்களால் முதியவர்களுக்கு உதவிப்பொருள்களும் வழங்கிவைக்கப்பட்டன.
Spread the love