41 ஆயிரம் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு
உள்ளூராட்சித் தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்காக அளிக்கப்பட்ட சுமார் 41 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் திணைக்கள சேவையாளர்களின் விடுமுறைகள் இரத்து.!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் திணைக்கள சேவையாளர்களின் விடுமுறைகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பி.ஆர். அபயரத்ன அறிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அஞ்சல் திணைக்களத்துக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை உரிய முறையில் சட்ட ரீதியாக நடத்துவதற்காக அஞ்சல் திணைக்களம் பாரிய கடமையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதன்படி தேர்தல் நடத்துதல், வாக்குகளை எண்ணுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக சேவையாளர்களை நியமிக்கும் கடிதங்களை தாமதமின்றி ஒப்படைத்தல் மற்றும் வாக்காளர் அட்டைகளை வீடு வீடாகச் சென்று ஒப்படைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேற்படி விடயங்களைக் கவனத்தில் கொண்டு அஞ்சல் திணைக்கள சேவையாளர்கள் விடுமுறை பெறாமல் இருக்குமாறு அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பி.ஆர். அபயரத்ன அறிவித்துள்ளார்.