164
சென்னையில் நடந்த இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளவருமான மகேந்திரசிங் டோனி கலந்து கொண்டார். அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது பெருமை அளிக்கிறது. சென்னை எனது 2-வது தாய் வீடு. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை சென்னையில்தான் பதிவு செய்து உள்ளேன்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதுள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவே நமது பலமாக இருக்கிறது. அனைத்து வீரர்களும் திறமை வெளிப்படுத்தும் சூழல் சென்னை அணிக்கு எப்போதும் உள்ளது.
சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு இந்தாண்டு ஐ.பி.எல். போட்டியை சிறந்ததாக மாற்றி இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Spread the love