குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக தென்கொரியாவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தென்கொரியாவின் நுகர்வோர் பிரிவு ஒன்றினால் இவ்வாறு அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிம் குக்கிற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஐபோன்கள் மெதுவாக இயங்குவதாகத் தெரிவித்தே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அப்பிள் நிறுவனம் வேண்டுமென்றே திட்டமிட்ட அடிப்படையில் ஐபோன் ரக கைப்பேசிகளின் பாவனைக் காலத்தை குறைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பற்றறி பயன்பாடு வீழ்ச்சியடைந்து ஐபோன் பயனர்கள் புதிய கைப்பேசிகளை கொள்வனவு செய்ய உந்தும் வகையில் திட்டமிட்ட அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிற்றிசன்ஸ் யுனைற்றட் போர் கொன்சியூமர் செவைறினிற்றி ( Citizens United for Consumer Sovereignty ) என்ற அமைப்பே இவ்வாறு அப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.