நான் வருத்தம் தெரிவித்து விட்டேன். இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்? ஆண்டாளை இழிவுபடுத்த வேண்டும் என நான் விரும்பியிருந்தால், அவரது பிறந்த இடத்திற்கே சென்று நான் சொற்பொழிவு ஆற்றியிருப்பேனா? நான் கற்ற தமிழ் மூலம் அவரது இலக்கியப் பங்களிப்பு குறித்துப் பாராட்ட விரும்பினேன். உள்ளபடியே சொல்லப்போனால், ஆண்டாளது படைப்புக்களை ஒரு பகுத்தறிவாளன் இந்த அளவுக்குச் சிறப்பாகப் பாராட்டுவது இதுதான் முதல் முறையாகும். எனது பணியில் நான் உண்மையாக இருந்துள்ளேன். மேலும், நீதி என் பக்கம் உள்ளது” என்று வைரமுத்து கூறியுள்ளார்.
“ஆண்டாள் பெரியாழ்வாருக்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும் அவள் பிறப்பு குறித்து எவுதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலம் அறியாத ஒருத்தியை குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானம் உள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்து விட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணை காணிக்கை ஆக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்தாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்கு சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.”