411
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அறுடை மற்றும் பொங்கல் நிகழ்வு இன்று(20) கிளிநொச்சி வட்டகச்சி பண்ணையில் இடம்பெற்றது. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரட்ண பல்லேகம பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக நெல் அறுவடையையும், மற்றும் பொங்கல் நிகழ்வையும் ஆரம்பித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி முல்லைத்தீவு கட்டளை அதிகாரி கேணல் ரட்ணப்பிரிய, கிளிநொச்சி பொறுப்பதிகாரி மேஜர் சாகர மற்றும் மதகுமார்கள், சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
Spread the love