182
தனியார் தொலைக்காட்சியின் சினிமா நிகழ்ச்சி ஒன்றை நடாத்திய பெண் அறிவிப்பாளர்கள் இருவர் சினிமா செய்தியைப் பற்றி பேசிக் கொள்ளும்போது, நடிகர் சூர்யாவின் பெயரை குறிப்பிடாமல் அவரது உயரத்தை குறிப்பிட்டு கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. குறித்த அறிவிப்பாளர்களையும் அந் நிகழ்ச்சியை நடாத்திய ஊடகத்தையும் விமர்சித்தும் அவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கூறியும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்து கொள்ள வேண்டாம் என்று சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த நடிகர் விஷால், “இதுவா நகைச்சுவை!!! இல்லவே இல்லை. நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக விமர்சனம் செய்வதா? சிறிதும் அர்த்தமற்றது” எனக் கூறியுள்ளார்.
Spread the love