சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அறுடை மற்றும் பொங்கல் நிகழ்வு இன்று(20) கிளிநொச்சி வட்டக்ச்சி பண்ணையில் இடம்பெற்றது. இதில் முன்னதாக நெல் அறுவடை நிகழ்வும் பின்னர் பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றன. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரட்ண பல்லேகம இவ்விரு நிகழ்வையும் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிபாளர் நாயகம் உள்ளிட்ட அதிதீகள் முறைப்படி நிகழ்வில் கலந்துகொண்டனர். எனினும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர, பொங்கல் பானைக்கு அரிசி இடும் போது காலணியுடன் ( சப்பாத்து) பங்கு கொண்டார். இந்தப் பண்ணையில் உள்ள ஆலயத்தின் முன்றலில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானைக்கு அரிசி இடும் போது காலனியுடனேயே அதனை மேற்கொண்டார். இது நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் சலசலப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. சம்பிரதாயமான ஒரு நிகழ்வில் அதனை மதிக்காது அலட்சியம் செய்வது போன்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.