Home இந்தியா “நான் எதைச் செய்தாலும், அதைச் சிறப்பாகச் செய்வேன்” கோடீஸ்வரரான முடி திருத்துனர்…

“நான் எதைச் செய்தாலும், அதைச் சிறப்பாகச் செய்வேன்” கோடீஸ்வரரான முடி திருத்துனர்…

by admin

 200 ஆடம்பர கார்களின் சொந்தக்காரர்  ரமேஷ் பாபு.. 

ஒரு முடி திருத்தும் கலைஞரான ஜி. ரமேஷ் பாபு என்பவர் 1994 ஆம் ஆண்டில் தனது சேமிப்பைக் கொண்டு வாங்கிய ஒரு மாருதி வானுடன் தனது தொழிலைத் தொடங்கித் தற்போது ஒரு கோடீஸ்வரராக (200 ஆடம்பர கார்களுக்குச் சொந்தக்காரர்) ஆன கதையைப் பற்றி  நம்மில்  பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

இன்றளவும் முடி வெட்டுவதை விரும்பும் தனது பணிவான தொடக்கக் காலங்களை ஒருபோதும் மறக்காத ரமேஷ் பாபுவின் ஊக்கமளிக்கும் இந்தக் கதையை அனைவரும்  பகிர்ந்து  கொள்ள வேண்டும்.

ரமேஷ் பாபு பெரும்பாலான நாட்களில்  தனது  3.1 கோடி ரூபாய்  மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை ஓட்டிக் கொண்டு தனது பணியிடத்திற்கு செல்கிறார். போட்டிகள் நிறைந்த உலகில் தனது நேர்மை, கடின உழைப்பு, பணிவு மற்றும் சிறிதளவு தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் மூலம் குடிசையிலிருந்து கோபுரத்திற்கு உயர்ந்து மிகப் பெரிய வெற்றியைச் சாதித்த ரமேஷ் பாபு என்பவருடைய அற்புதமான கதை இது.

அரசியல்வாதிகள் முதல் பிரபல பொலிவுட் நடிகர்கள் வரை அவர் மெர்க்கடஸ், பிஎம்டபுள்யூ, ஓடி, ஐந்து மற்றும் பத்து இருக்கைகளைக் கொண்ட ஆடம்பர வான்கள் மற்றும் அவருடைய இறுதிப் பெருமிதமான ரோல்ஸ் ராய் வரை 75 சொகுசு ஆடம்பரக் கார்களின் அணிவகுப்பை வைத்திருக்கிறார்.  மேலும் அவரது வியாபார வாடிக்கையாளர்களின் வரிசை அரசியல்வாதிகள் முதல் பிரபல பாலிவுட் நடிகர்களான சலமான கான், அமீர் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்றவர்களின் பட்டியல் நீள்கிறது.

 அவர் வாடகைக்கு விடும் காரின் மிகக் குறைந்த வாடகை ஒரு நாளுக்கு  1000 ரூபாய் முதல் மிக உயர்ந்த அளவாக 50,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கிறது.  இந்த மனிதருக்கு வாழ்க்கை எப்பொழுதும் திருப்திகரமானதாக இருந்ததில்லை. இவருக்கு 7 வயது இருக்கும் போது பெங்களூரில் முடி திருத்துபவராக இருந்த இவரின் தந்தை பி. கோபால் மரணமடைந்தார். மகனுக்காக அவர் விட்டுச் சென்றதெல்லாம் ஒரு சிறிய முடி திருத்த கடை மட்டுமே. அப்பொழுது அவருக்குத் தனது மகன் 40 வயது கூட நிறைவடையும் முன்னரே ஒரு கோடிஸ்வரராக மாறுவார் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கணவரை இழந்த ரமேஷ் பாபுவின் தாயார் தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், அவர்களுக்கு மற்றவர்களைப் போலக் கல்வி கிடைக்கவும் மற்றும் தன் குழந்தைகள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடையவும் வேண்டி ஒரு சமையல்காரராக வேலை பார்த்துக் கடினமாக உழைத்தார். அவரால் முடி திருத்தும் கடையை நடத்த முடியாததால் ஒரு நாளுக்கு  5 ரூபாய்க்  அதனை வாடகைக்கு கொடுத்தார்.

தனது ஊழியர்களுக்குக் கட்டளைகள் இட்டுக்கொண்டு தனது மொபைல் போன் அழைப்புகளுக்குப் பதிலளித்துக் கொண்டே இடையே “நாங்கள் ஒரு நாளுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தோம்” என்று சொல்கிறார் ரமேஷ் பாபு.   அவர் வளர வளர அவருடைய பொறுப்புணர்வு அவரை அழுத்தவே மேற்கொண்டு படிப்பதா அல்லது அவரது தாயாருக்கு ஆதரவாகக் குடும்ப வருமானத்திற்காக வேலைக்குச் செல்லத் தொடங்குவதா என்று அவரால் முடிவெடுக்க முடியாமல் திணறினார்.

 இருப்பினும் அவருடைய தாயாரின் வலியுறுத்தல் காரணமாகப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு முந்தைய நிலை வரை படிப்பதாகத் தீர்மானித்தார் மேலும் மின்னணுவியலில் ஒரு பட்டமும் பெற்றார். இதற்கிடையே அவருடைய தந்தையாரின் கடை இன்னமும் தொடர்ந்து அற்பத் தொகைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு 1989 இல் அந்தக் கடையைத் தானே நடத்துவதாக முடிவெடுத்தார். முதன்முதலில் அவருடைய தாத்தாவால் தொடங்கப்பட்ட அந்தக் கடையில் அவர் வேலை செய்யத் தொடங்கினார்.

பின்னாட்களில் இன்னர் ஸ்பேஸ் என்று அவர் பெயரிட்ட அந்தக் கடையில் வேலை செய்யும் போது அவர் எப்பொழுதும் தனக்கெனச் சொந்தமாக ஒரு காரை வாங்க வேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருந்தார்.  எனவே அவர் ஒரு மாருதி ஆம்னியை வாங்கி அதை வாடகைக்கு விடத் தொடங்கினார். அவரது பேரார்வத்தினால் தொடங்கிய அதுவே விரைவில் மிகப் பெரிய அளவில் வெற்றிகரமான வாடகைக் கார வியாபாரமாக மாறியது.  2004 இல் அரசாங்கம் சுற்றுலாத் துறையைத் ஊக்குவிக்கத் தொடங்கிய பின், அவர் ஆடம்பர கார்களை வாடகைக்கு விடுவது மற்றும் சுயமாகக் கார ஓட்டும் தொழிலில் நுழைந்தார். அதன் பிறகு ரமேஷின் சுற்றுலா மற்றும் போக்குவரத்து பின்னடைவைச்  சந்திக்கவில்லை.

“நான் உள்ளூரில் இன்ல்ரெல் போன்ற சிறிய வாடிக்கையாளர்களுக்கு எனது கார்களை வாடகைக்கு விடத் தொடங்கினேன். அது நன்றாகப் போய்க் கொண்டிருந்த போது, நான் தைரியமாக ஒரு இன்னும் ஓர் அடியெடுத்து வைத்து,   என்னுடைய முதல் ஈ வகுப்பு மெர்கடெஸ் காரை வாங்கினேன். ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் பெரிய அதிகாரிகளுக்குக் கூட ஆடம்பர சொகுசு கார்களை வாடகைக்கு விடும் டாக்சி சேவை இருந்திருக்கவில்லை.” என அவர் தெரிவித்தார்.

பெரிய நட்சத்திர தொழிலதிபர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் அவருடைய கார்களில் பயணம் செய்திருக்கிறார்கள். “எனக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள், மேலும் எனது கார்கள் மிகப் பெரிய நபர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராய் பச்சன் முதல் அமிதாப் பச்சன், ஷாரூக் எனப் பெரும்பாலான பிரபலங்கள் என் காரை ஓட்டிக் கொண்டு வலம் வந்திருக்கிறார்கள்.

இத்தகைய உச்சங்களை அவர் தன்னுடைய வேர்களின் தொடுதலை இழக்க விரும்பாததால் ரமேஷ் இன்னமும் அவருடைய முடிதிருத்த கடைக்குத் தினமும் செல்கிறார். “தினமும் காலை 6 மணிக்கு நான் தொழில் எப்படி நடக்கிறது என்பதைச் சரிபார்க்க கடைக்குச் செல்வேன். அதன் பிறகு காலை 10.30 க்கு நான் அலுவலகத்தில் இருப்பேன். மேலும் ஒவ்வொரு மாலையும் தவறாமல் 5.30 மணிக்கு நான் எங்கள் முடிதிருத்த நிலையத்தில் இருப்பேன். என்னிடம் மட்டுமே குறிப்பாக முடி வெட்டிக் கொள்ள வேண்டும் என்று வரும் சில வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எனக்கு மும்பையிலும் கொல்கத்தாவிலும் மாறாத வாடிக்கையாளர் தளம் உள்ளது” என்கிறார் அவர். குடும்பம் மேலும் ரமேஷ் தனது குழந்தைகளான இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுக்குச் சிகை அலங்காரக் கலையைக் கற்றுத் தருகிறார். “அதுவும் ஒரு திறன் சார்ந்த வேலை, அதை அவர்கள் கண்டிப்பாகக் கற்றுக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் நான் அவர்களை என்னுடன் கடைக்கு அழைத்துச் செல்வேன். ஆனால் தற்போது அங்கு எதையும் எடுத்துச் செய்வதற்கு அவர்கள் மிகவும் சிறியவர்களாக இருக்கிறார்கள். நான் அங்கு இருக்கும் வரையிலும், எனக்குப் பிறகும் கூட, முடி திருத்த நிலையம் வெற்றிகரமாக இயங்கும் என்று முழு நம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன். விடுமுறை குடும்பத்துடன் சுற்றுலா செல்வதாக இருந்தாலொழிய பொதுவாக நான் விடுமுறை எடுத்துக் கொள்வதில்லை. செய்யும் தொழிலே தெய்வம் என்று நான் எப்பொழுதும் நம்புகிறேன். இந்த இன்னர் ஸ்பேஸ் முடி திருத்த கடையிலிருந்து தான் எனக்கு உணவிற்கான வருமானம் கிடைக்கிறது.” என்கிறார். பழமை மறவாதவர் இன்றளவும் கூட, அவர் இத்தகைய பணக்காரரான பிறகும் கூடத் தன்னுடைய வேர்களை மறக்கவில்லை. அவர் தனது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ. 100 க்கு முடி வெட்டுகிறார். எதைச் செய்தாலும், அதைச் சிறப்பாகச் செய்பவர் பாபு தான் சிறந்தது என்று கருதியதை செய்ததன் மூலம் தனது வெற்றியை அடைந்தார். “நான் எதைச் செய்தாலும், அதைச் சிறப்பாகச் செய்வேன், அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்,” என்று புன்னகைக்கிறார் அவர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More