பங்களாதேசில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிம்பாபே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலாக போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. நாணயசுழற்சியில் வென்ற சிம்பாபே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்;படி 44 ஓவர்களிலேயே 198 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
பின்னர், 199 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 44.5 ஓவர்களில், ஐந்து விக்கெட்டுக்கள் இழந்த நிலையில் 202 ஓட்டங்களை பெற்றது. இந்தநிலையில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்களால் சிம்பாப்வே அணியை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது