எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலாவில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக உணவு கிடைக்காமல் மக்கள் பசி, பட்டினியால் பெரும் கஸ்ரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பலர் கொள்ளைகளிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவடைந்தமையினால் அங்கு பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. அதனை சமாளிக்க அந்நாட்டு ஜனாதிபதி நிகோலன் மடூரோ பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தொழிற்சாலைகள் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் உணவு பொருட்களின் விலையை மிக குறைந்த விலைக்கு விற்க வலியுறுத்தப்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் தமது உணவு பொருட்கள் உற்பத்திளை நிறுத்தினர்.
இதனால் அங்கு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் உணவு கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். இதனால் உணவு தானிய குடோன்கள் மற்றும் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுவதுடன் உணவு பொருட்களை ஏற்றி வரும் பாரவூர்திகளை பொதுமக்கள் குழுக்களாகச் சென்று வழிமறித்து கொள்ளையத்தும் வருகின்றனர். மேலும் இந்த கொள்ளை நடவடிக்கைகளில் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட வன்முறைகளில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.