தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபைக்கான . நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமை வகித்தார். சுத்தமான பசுமை மாநகரம் எனும் கருத்திலான குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா வெளியிட்டு வைக்க புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் பெற்றுக் கொண்டார்.
இத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் யாழ். நகர அபிவிருத்தி, முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்பத்தல் , வீதி மறுசீரமைப்பு, உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களாக ஆர்.ஜெய்சேகரம், பா.கஜதீபன், ஆ.பரம்சோதி உள்ளிட்ட மாநகர வேட்பாளர்களும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
1 comment
வாக்குகளை எடுக்க, தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பயன்படுத்துகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வாக்காளர்களையும் மறந்துவிடுகிறார்கள். வாக்காளர்களை ஏமாற்றுவது அரசியல்வாதிகளின் வழக்கமாக உள்ளது. வாக்காளர்களும் சுயநலவாதிகளாக இருக்கின்றார்கள். பொதுநலம் கூடியவர்களாக தமிழ் மக்கள் மாறி நல்ல சேவை செய்யக்கூடியவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.