அரசியலமைப்பு சட்டத்தை மீறி சர்வாதிகாரியாக தான் முயற்சித்தால் இராணுவம் மற்றும் காவல்துறையினர் தன்னை சுட்டுக் கொல்லலாம் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி; ரொட்ரிகோ டூர்ட்டே ( Rodrigo Duterte ) தெரிவித்துள்ளார். தலைநகர் மணிலாவில் இன்று இராணுவ தலைமை முகாமை பார்வையிட்ட தன் பின்னர் அங்கு உரையாற்றிய போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக கடுமையான நடிவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி; ரொட்ரிகோ டூர்ட்டே போதைப் பொருள் கடத்தல்கார்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, ஆட்சி மற்றும் நிர்வாகரீதியாக பல்வேறு சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வரும் அவர் அனைத்து மாகாணங்களிலும் சமச்சீரான ஆட்சி முறையை அறிமுகப்படுத்தவும் முயன்று வருகிறார்.
அவரது இந்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தநிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்