குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்னின் பிராந்தியமான கட்டலோனியாவில் மீளவும் சர்ச்சைகள் ஆரம்பித்துள்ளன. கடந்த டிசம்பர் மாதம் கட்டலோனியாவில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. தனிநாட்டு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்த கட்டலோனிய கட்சிகளே தேர்தலில் வெற்றியீட்டியிருந்தன. கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் ( Carles Puigdemont )தற்போது பெல்ஜியத்தில் அடைக்கலம் பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் தனிநாட்டுக் கோரிக்கை விடுத்த காரணத்தினால் கார்லெஸ் பூகிடமண்ட் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட்டை கட்டலோனிய பாராளுமன்றம் மீளவும் தங்களது தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆவர் வெளிநாட்டில் இருந்து கொண்டே ஆட்சி நடத்த முடியும் என சில தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்தக் கருத்தக்கள் ஸ்பெய்ன் கட்டலோனிய விவகாரத்தை மீளவும் பெரும் சர்ச்சையில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது