பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பணி நீக்குமாறு ஜே.என்.பி.யின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய உறுப்பினருமான பியசிறி விஜேநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார். உடனடியாக பிரதமரை, ஜனாதிபதி பதவி நீக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். பொருத்தமான ஒருவரை ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டுமென கோரியுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் பிரதமருக்கு நேரடி தொடர்பு உண்டு என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நிதி அமைச்சரை பணி நீக்கியது போன்றே, பிரதமரையும் ஜனாதிபதி பதவி நீக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை வரலாற்றில் பிரதமர் ஒருவர் இவ்வாறு மோசடிகளுடன் தொடர்புபட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரை பணி நீக்குமாறு கோரிக்கை:-
156
Spread the love