Home சினிமா விஜய்க்காக காத்துக்கொண்டிருக்கிறேன் – வேலாயுதம் பட இயக்குனர் மோகன் ராஜா :

விஜய்க்காக காத்துக்கொண்டிருக்கிறேன் – வேலாயுதம் பட இயக்குனர் மோகன் ராஜா :

by admin


மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகின்றார். இந்த படத்தில் இவருக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்னரே விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ‘வேலாயுதம்’ படத்தை இயக்கிய மோகன் ராஜா விஜயின் அடுத்த படத்தை இயக்குவார் என்று செய்திகள் வெளிவந்தன.

அத்துடன் இயக்குனர் மோகன் ராஜாவும் சமீபத்தில் விஜய்யை சந்தித்தாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் ‘விஜய் படத்தை மீண்டும் இயக்குவீர்களா?’ என்று கேட்டதற்கு ‘காத்துக்கொண்டிருக்கிறேன் என்று மோகன் ராஜா பதிலளித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More