குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியூடாக இந்தியாவில் இருந்து, இலங்கைக்கு கடத்தப்பட்ட 113 கிலோ கஞ்சா கைபெற்றப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் நேற்று இரவு 8:00 மணியளவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் , கடல் நீர் உள்ளே செல்லாதவாறு மிகவும் நுனுக்காமான முறையில் பொதி செய்யப்பட்ட பொதி ஒன்றினை கைபெற்றியிருந்தனர். குறித்த பொதியினுள் சுமார் 1கோடியே 16 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா போதை பொருள் காணப்பட்டு உள்ளது.
இளவாலை மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்பு ஊடாக அன்மைக்காலமாக கஞ்சா கடத்தல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பொலிஸாரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கஞ்சா கடத்தல் நபர்கள் வடமராட்சி கிழக்கு பகுதியூடாக கஞ்சா கடத்தும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். கைபெற்றப்பட்ட கஞ்சா காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் யழ் காங்கேசன்துறை பொலிசாரிடம் அது ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.