குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா திர்மானம் நிறைவேற்றப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் எதனையும் கொண்டு வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் ரவி கருணாநாயக்கவை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வகையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினரும் பிரதேச சபை உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர் எனவும் இதனால், ஜனாதிபதி ஆத்திரமுற்று பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேடைகளில் பொய்யுரைக்கத் தொடங்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.