Home இலங்கைபிணை முறி அறிக்கை ரவி கருணாநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்படவில்லை

பிணை முறி அறிக்கை ரவி கருணாநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்படவில்லை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம், சட்ட மா அதிபர் திணைக்களம், பாராளுமன்றம் மற்றும் மத்திய ஆகியனவற்றுக்கே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையின் பிரதி ரவி கருணாநாயக்கவிற்கு கிடைத்துள்ளதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதனைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செலயகத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து தாம் வினவியதாகவும், வெளிநபர்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More