தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்துவிட்டார் என விஜயேந்திரர் மீது காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் சென்னையில் தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டு வைத்த நிலையில் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
இதன்போது ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நின்ற போதும் விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததற்காக விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரை கைது செய்யக்கோரி காவல்துறையில் முறைப்பாடு ; அளிக்கப்பட்டுள்ளது.