மகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.வட கர்நாடகாவில் மகதாயி நதிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டுமென கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக மத்திய அரசின் உருவபொம்மையை எரித்து பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றநிலையில் இன்று கர்நாடகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகதாயி நதிநீர் பிரச்சினை, கர்நாடக, கோவா மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வருகின்ற நிலையில்
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெறுகின்றது. . இது முழுமையான முழு அடைப்புப் போராட்டமாக இருக்கும் எனவும் போராட்டத்தை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.