குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தண்டனை விதிக்கப்பட முடியாது என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்துக் கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதியினால் குற்றவாளிகளை தண்டிக்க முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அழுத்தம் காரணமாகவே பிணை முறி மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கிய போதிலும் நடைமுறையில் இந்த வாக்குறுதிகளை ஜனாதிபதியினால் நிறைவேற்ற முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளர்.ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி ஜனாதிபதி தனித்து தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என அவ ர் குறிப்பிட்டுள்ளார்.