Home இலங்கை மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் – தொலை­பேசி அழைப்­புகள் பகுப்­பாய்வுக்கு உட்பட்டுள்ளன…

மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் – தொலை­பேசி அழைப்­புகள் பகுப்­பாய்வுக்கு உட்பட்டுள்ளன…

by admin

ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் தொலை­பேசி அழைப்­புக்­களை பகுப்­பாய்வு செய்யும் நட­வ­டி­கைகள் தற்­போது இடம்­பெற்று வரு­வ­தாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதி­மன்­றத்­துக்கு அறி­வித்துள்ளது. கடத்தல், கப்பம் கோரல் தொடர்பில் இதன்போது  பல தக­வல்­களை வெளிப்படுத்தி வரு­வ­தா­கவும் அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொடர்வதாகவும்,  குற்றப் புல­னாய்வுப் பிரிவின், கூட்டுக் கொள்ளை தொடர்பிலான  விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி காவற்துறைப் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா நீதிவான் லங்கா  ஜய­ரத்­ன­வுக்கு அறிவித்துள்ளார்.

அதன்­படி இந்த விவ­கா­ரத்தில் இது­வரை கைது செய்­யப்­பட்ட 9 பேரில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள காமினி, மெண்டிஸ் ஆகிய இரு முன்னாள் கடற்­படை புல­னாய்­வா­ளர்­க­ளையும் எதிர்­வரும் எட்டாம் திகதி வரை  விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

இதன்­போது மன்­றுக்கு விசா­ர­ணை­களை தெளி­வு­ப­டுத்­திய காவற்துறைப் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா, விசாரணைகளை  மிக விரைவில் நிறைவு செய்ய எதிர்­பார்ப்­ப­தா­கவும், தற்­போது கடத்தல், கப்பம்  கோரியோர் தொடர்பில் மேலும் தக­வல்­களை வெளிப்­ப­டுத்த அடை­யாளம் காணப்­பட்ட தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்­திய விசேட பகுப்­பாய்­வுகள் இடம்­பெ­று­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

கடற்­படை புல­னா­ய்வுப் பிரிவின் முன்னாள் வீர­ரான கஸ்தூரிகே காமினி, அருண துஷார மெண்டிஸ் ஆகியோரின் விளக்கமறியலை நீடித்த நீதிவான் வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More