குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரோஹினிய மக்கள் பிரச்சினை குறித்த ஆலோசனை குழுவிலிருந்து அமெரிக்கப் பிரதிநிதி விலகிக் கொண்டுள்ளார். ரோஹினிய மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்கும் நோக்கில் மியன்மாரின் தலைவி ஆன் சான் சூ கீ நியமித்த குழுவில், அமெரிக்க ராஜதந்திரியான பில் ரிச்சர்ட்சன் உள்வாங்கப்பட்டிருந்தார். எனினும், பில் ரிச்சர்ட்சன் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆன் சான் சூ கியின் இந்த சர்வதேச குழுவானது மியன்மார் அரசாங்கத்தை வெள்ளையடிப்புச் செய்து அவர்களை பாதுகாக்கும் நோக்கிலானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், பில் ரிச்சர்ட்சன் வேறும் நோக்கத்தில் இயங்கி வருவதாக மியன்மார் குற்றம் சுமத்தியுள்ளது. அண்மைய நாட்களில் மியன்மாரில் இடம்பெற்ற மோதல்கள் முரண்பாடுகளின் காரணமாக சுமார் 650000 ரோஹினிய முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேஸில் தங்கம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.