165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென்கொரியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது என வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தென்கொரியாவின் மிரியாங்கில் அமைந்துள்ள செஜொங் வைத்தியசாலையில் பாரிய தீ விபத்துச் சம்பவமொன்று இன்று காலை ஏற்பட்டிருந்தது.
தென் கொரியாவிற்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் தென் கொரிய அதிகாரிகளுடன் தொடர்பு பேணி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்துச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 70 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love