குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியாவிற்கும் தென் ஆபிரிக்காவிற்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் திட்டமிட்டவாறு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜொஹனர்ஸ்பேர்க் வொன்டர்ஸ் மைதானத்தின் ஆடுகளம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைவதற்கு 19 நிமிடங்களுக்கு முன்னதாகவே நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தியிருந்தனர்.
ஆடுகளம் வீரர்களுக்கு ஆபத்தான வகையில் அமைந்திருந்தது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது எனினும், போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்றைய தினம் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணியின் துடுப்பாட்டவீரர்களும் பந்துகளை எதிர்நோக்குவதில் சவால்களை எதிர்நோக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கட் போட்டியொன்றை நடாத்துவதற்கு இந்த ஆடுகளம் பொருத்தமற்றது என சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.