இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கோலாப்பூர் அருகே உள்ள கோயில்களுக்கு பேருந்து ஒன்றில் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சகங்கா என்னும் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர் விபத்தில் சிக்கிய 3 பேரை காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.