212
இயக்குனர் ரஞ்சித்தின் ‘சினம்கொள்’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ரகுநந்தனின் இசையில் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் நான்கு பாடல்களை எழுதியுள்ளார். இயக்குனர் சீனுராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’ திரைப்படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் ரகுநந்தன் தன் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றவர்.
நீர்ப்பறவை, சுந்தரபாண்டியன், மாப்பிள சிங்கம் முதலிய திரைப்படங்களுக்கும் இசையமைத்து கவனத்தை ஈர்த்தவர். இவரது இசை தமிழ் மண் வாசம் கொண்டது. நீர்ப்பறவை, சுந்தரபாண்டியன் பெரும் வரவேற்பை பெற்றன. ஈழப் பிரச்சினையை பற்றி பேசும் சினம் கொள் திரைப்படத்தை ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் முதலிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. விரைவில் சினம்கொள் திரைப்படத்தின் பாடல் வெளியீடு இடம்பெறவுள்ளது.
Spread the love