யாழ்.இந்துக்கல்லூரிபழையமாணவர்களும் – நூலகநிறுவனமும்
இணைந்துநடத்தும்
உலகம்பலவிதம் – நூல்அறிமுகமும்வெளியீடும்
(ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின்இந்துசாதனஎழுத்துக்கள், பதிப்பாசிரியர்சோமேசசுந்தரிகிருஷ்ணகுமார், யாழ்இந்துக்கல்லூரி125ம்ஆண்டுவிழாவெளியீடு)
இடம்: ShriKanagaThurkkai Amman Temple,
5, Chapel Road,
W139AE
திகதி: 28/01/2018 ஞாயிறு
நேரம்: பி.ப 4.00 – 7.30
ஆர்வமுள்ள அனைவரையும் நு ல்வெளியீட்டு நிகழ்வில் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நூலுக்கான குறைந்தபட்ச அன்பளிப்பு: £ 30.00
தொடர்பு:ஜெயசீலன் :0794 0540 279; இளையதம்பிதயானந்தா: 0770 2743 011
நிகழ்ச்சிநிரல்
வரவேற்புரை: திரு. யோகநாதன்
( நிர்வாகசபைத்தலைவர் – ஈலிங்க்ஸ்ரீகனகதுர்க்காஅம்மன்ஆலயம்)
ஆசியுரை: பிரதமகுருஈலிங்க்ஸ்ரீகனகதுர்க்காஅம்மன்ஆலயம்
தலைமைஉரை-இளையதம்பிதயானந்தா
நூல்வெளியீடு
பேச்சாளர்கள் :திருந.செல்வராஜா
(ஈழத்துநூலகவியலாளரும், ஆய்வாளரும்)
ஈழப்படைப்புலகவரலாற்றுப்பின்னணியில்உலகம்பலவிதம்நூல்வரவின்முக்கியத்துவம்
திரு.தங்கேஸ்பரஞ்சோதி
(மானிடவியல்முனைவர்பட்டஆய்வாளர்)
உலகம்பலவிதம்காட்டும்சமூகமுரண்பாடுகள்
திரு.சிவாப்பிள்ளை
(யாழ்இந்துக்கல்லூறிபழையமாணவர் 1950-1960)
ஈழப்படைப்பாக்கங்களில்யாழ்இந்துக்கல்லூரியின்பங்களிப்பு
திருமதிமாதவிசிவலீலன்
(எழுத்தாளர்,கவிஞர், இலக்கியஆய்வாளர்)
உலகம்பலவிதம்சொல்லும்யாழ்ப்பாணத்துப்பெண்கள்
நன்றியுரை
திரு.பிரதாபன
(யாழ்இந்துக்கல்லூரிபழையமாணவர்)
உலகம்பலவிதம்:
பிரித்தானியரின்ஆட்சிக்காலத்தில் 35 ஆண்டுகள்(1912-1947) யாழ்.இந்துக்கல்லூரிஆசிரியராகவும், அதேநேரத்தில் 40 ஆண்டுகள் (1912-1951) யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இந்துசாதனம் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பின்னர்பிரதம ஆசிரியராகவும் இயங்கிவந்த ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் சிறந்த ஈழத்துத் தமிழ் உரைநடைவல்லாளர், நாடகர், நாவலாசிரியர் மட்டுமல்ல அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் தொடர்ச்சியாக எழுதி வந்த ஒருசிறந்த பத்தி எழுத்தாளரும் கூட. இந்து சாதனம்எ என்ற பத்திரிகையூடாக ப்பலமான சுதேச ஊடகம் ஒன்று ஒரு சமூகத்திலும் தேசத்திலும் காலனியஆட்சியிலும் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை வழிநடத்திய பத்திரிகையாளர்.
அவரது எழுத்துக்களின் திரட்டான இந்தநூலில் எளிமையும் அழகும்கொண்ட மொழியில் பெரும்பாலும் அவர்எழுதிய எல்லாவிடயங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இம்முயற்சியினை ஒருவரலாற்றுத் தொண்டாகக்கருதி, அதன்பதிப்பாசிரியராக இருந்து சிறப்புறச் செய்து முடித்துள்ளார், யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத் துறையைச் சேர்ந்த, சோமேசசுந்தரிகிருஷ்ணகுமார் அவர்கள். கிட்டத்தட்ட 700பக்கங்களைக் கொண்ட இந்தநூலை கொழும்பிலிருக்கும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிபழையமாணவர் சங்கம்பதிப்பித்து வெளியிட்டுள்ளது.