188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
செக் குடியரசில் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி மிலோஸ் ஸிமென் வெற்றியீட்டியுள்ளார். இதன்படி, மிலோஸ் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிலோஸை எதிர்த்து ஜிரி டராஹோஸ் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஸ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் பிறப்பித்துள்ள தடைகளை கடுமையாக எதிர்த்து வரும் மிலோஸை, செக் குடியரசு மக்கள் ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மிலோஸ் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 52 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். குறித்த தேர்தலில் சுமார் 66 வீதமானவர்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love