குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையே மிகவும் பெரிய பிரச்சினை என பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை ரத்து செய்யுமாறு ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்துகொள்ள வேண்டுமென பரிந்துரை செய்வதனை விடவும், இந்த அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஆளும் கட்சியினரிடம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.