இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது, தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களானது இன அழிப்புக்கு இணையானதென ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பகுதியில், ஐ.நா அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு மேலாளராகக் கடமையாற்றிய பெஞ்சமின் டிக்ஸ் என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2004 முதல் 2008ஆம் ஆண்டுவரையான 4 ஆண்டுகள் குறித்த பகுதியில் கடமையாற்றிய அவர் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
புகைப்படக் கலைஞரான டிக்ஸ் இந்தியாவின் ராஜஸ்தானில் நடைபெறும் இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றுள்ள நிலையில் அங்கு பிடிஐ செய்தியாளரிடம் வழங்கிய நேர்காணலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது இரு தரப்பினரும் நிகழ்த்திய குற்றங்கள் மிகக் கொடூரமானவை எனவும் குறிப்பாக, இராணுவத்தினரின் செயல்கள் போர்க் குற்றத்துக்கு நிகரானவை எனவும் தெரிவித்த அவர் அவை இன அழிப்புக்கு இணையானவை எனவும் இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள வன்முறையை மறுக்கும் இராணுவம் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாக கூறிக்கொள்கிறது எனவும் இது தமிழர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கான பேரழிவு எனவும் தெரிவித்துள்ளார்.
Benjamin Dix was working with the United Nations and Norwegian People’s Aid in the Vanni from 2004 to 2008. As the fighting between the Sri Lankan Government and the LTTE escalated, he was part of the contingent that was ordered to leave the area by the Sri Lankan government in September 2008 . He has now joined Lindsay Pollock, an illustrator, to create a graphic novel titled the Vanni that tells the story of a Tamil family living through the horrors of that time from bombing to internment.