குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறையினருக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக காவல்துறையினர் செயற்படாவிட்டால் அது அவர்களின் பலவீனத்தையே காண்பிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி பேதமின்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்படும் வேட்பாளர்களுக்கு வேறு தரப்பினர் இடையூறு ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.