குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சேறு பூசும் நபர்களுக்கு எதிர்வரும் 10ம் திகதி நல்ல பாடம் புகட்டப்படும் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். சேறு பூசி அரசியல் நடாத்துவோருக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது தகுந்த பாடம் புகட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி வலுவான ஓர் அரசியல் கட்டமைப்பினைக் கொண்ட ஓர் கட்சி என்பதனை எதிராளிகள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.