இந்தியாவின் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு வெடிகுண்டு தயாரிப்புக்கான இலத்திரனியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த வெடிகுண்டு தயாரிப்புக்கான இலத்திரனியல் பொருட்கள் நாச வேலைகளை மேற்கொள்வதற்காக யாராவது சதி செய்திருக்கிறார்களா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக குறித்த பாதை வழியாக தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் சென்று வருவதாகவும் இவ்வழிகளில் முக்கிய பிரமுகர்களும் நடந்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு குறித்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் குறித்த வெடிகுண்டு தயாரிப்புக்கான இலத்திரனியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.