168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் காலத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அனைத்து பணியாளர்களும் வாக்களிப்பதற்கு உரிய விடுமுறை வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிக்கும் தொழில் புரியும் இடத்திற்கும் இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை வழங்கப்படாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
Spread the love