குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து செயற்படக்கூடிய சாத்தியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 96 உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டால் ஆட்சி அமைக்க முடியும் என தாம் கூறியதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் நிச்சயம் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெரிந்தே தாம் இதனைக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன முன்னணியில் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுடன் இணைந்து செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.