155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சஞ்சரித்த நபர் ஒருவரை காவல்தறையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
கல்கிஸ்ஸ பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின்போதே குறித்த சந்தேகத்துக்குரியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் ஐந்து இறப்பர் முத்திரைகளும், 5 கிராம் ஹெரோயினும் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாகவும், சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love