306
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான றட்ணஜீவன் கூல் தமிழரசு கட்சிக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம் சாட்டி தேர்தல் ஆணைக்குழுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கடிதம் மூலம் முறையிட்டு உள்ளதாக சட்டத்தரணி கு.குருபரன் மன்றில் தெரிவித்தார்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது தமிழ் தேசிய பேரவையினர் சார்பில் மன்றில் முன்னிலையான போதே சட்டத்தரணி அதனை தெரிவித்தார்.
Spread the love