இந்தியக் கடற்படையின் மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பல் கராஞ்ச் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மஸாகான் டக் லிமிடெட் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பலை கடற்படைத் தலைவர் அட்மிரல் சுனில் லன்பாவின் மனைவி இந்த நீர்மூழ்கிக் கப்பலைத் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் முறையாக தனது பணியில் ஈடுபடுவதற்கு முன் அடுத்த ஆண்டில் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என இந்நிகழ்வில் பங்கேற்ற கடற்படைத் தலைவர் அட்மிரல் லன்பா தெரிவித்துள்ளார்.
மஸாகான் டக் லிமிடெட் சார்பாக மேலும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட உள்ளதாகவும் இந்த நீர்மூழ்கிக் கக்பபல்கள் அனைத்தும் பிரஞ்ச் கடற்படையின் கப்பல் கட்டும் குழுவுடன் இணைந்து கட்டப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வகையான நீர்மூழ்கிக் கப்பல்கள் தொழில்துறை திறன் கொண்டதாக இருக்கும் சில நாடுகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன எனவும் மிகவும் நுட்பமான மற்றும் துல்லியமான கைவினைக் கருவியாக இது தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.