155
பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி ஷோபி ஆகியோர் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இலங்கையின் 70ம் சுதந்திர தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாக பங்கேற்கும் நோக்கில் இளவரசர் இலங்கைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நண்பகல் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே. 348 என்ற விமானமூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த அவர்கள் எதிர்வரும் 5ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love