231
பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட இந்தநிலநடுக்கம் 6.1 ரிக்டர் அலகாக பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 74000 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love