குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பிணை முறி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பாராளுமன்ற விவாதம் ஓர் கண்துடைப்பு நாடகம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ம் திகதி பாராளுமன்றில் இந்த விவாதம் நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தாம் விடுத்த சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த விவாதம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸக்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படாமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு, நீதித்துறை ஆகிய அமைச்சுக்களின் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சியிடம் காணப்படுகின்றது எனவும், ஐக்கிய தேசியக் கட்சியே சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.